Friday, May 7, 2010

முகம்

முகம் தொலைந்து போயிற்று
இரண்டு வம்சங்களின் சேர்க்கையால்
கிடைத்தது அது. பாரம்பரிய பெருமை மிக்கது.
காணமல் கோணாமல் கண்டு
கர்மாக்கள் செய்யும் நாளும்.
குளிக்கும் குடுமி சீவும்
குறிகளிடும். கண்கொள்ளா
தெய்விகம் மிளிரும் முகம்
இருந்த முகத்தை இழந்ததால்
பொருந்தா முகங்கள் பல
புகலிடம் பெற்றன
யார் யார் முகங்களோ
சொந்தமென்றாயிற்று
பல முகங்களோடு திரிவதால்
ஒரு முகமாய் ஏதும் இயலவில்லை
தொலைக்கத முகமுடையோர்
யாரேனும் தொலைந்த முகத்தைத்
தேடி தரும் வரை -
பக்தி மலரில்லை
அறிவோம் ஆன்மிகம் இல்லை
இந்த நாள் இனிய நாள் இல்லை
திரை மலர்கள் இல்லை. ஆடை குறைய
ஆடும் அவலங்கள் இல்லை.
அநித்தியங்கள் நித்தியங்கள் ஆகா.

- எஸ். சுந்தரேசன்